உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மாஸ் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை! கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகிறது?
அதிமுக பாஜக தலைவர்களுக்கும் இடையிலான மோதல் உச்சம் பெற்றதை அடுத்து பாஜக கூட்டணியில் விலகுவதாக அதிமுக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
அண்ணாமலை இல்லாமலேயே பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே அதிமுகவுடனான முட்டல் மோதல் அவ்வப்போது இருந்து கொண்டே வந்தது. இந்நிலையில், அண்ணாமலை அண்ணா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அதிமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு அண்ணாமலையும் பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க;- பாஜகதான் அதிமுகவின் வெற்றிக்கு தடை என இப்போ தான் தெரியுதா.? மாஜி அமைச்சரை விளாசிய கரு.நாகராஜ்
இருக்கட்சி தலைவர்களுக்கும் இடையிலான மோதல் உச்சம் பெற்றதை அடுத்து பாஜக கூட்டணியில் விலகுவதாக அதிமுக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஆனால், அதிமுகவுடன் சமரசம் பேச்சுவார்த்தையை பாஜக நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதை அதிமுக தரப்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டனர்.
இதனையடுத்து, டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டரை சந்தித்து பேசினார். இதனால் அக்டோபர் 3ம் தேதி அண்ணாமலை தலைமையில் நடைபெறவிருந்த அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் சென்னை தமிழக பாஜக நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணாமலை இல்லாமல் தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டணி விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று லுறப்படுகிறது. அண்ணாமலை உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரை மருத்துவர்கள் 2 வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.