நாட்டின் தலைநகர் டெல்லி மாநிலமாக இருந்தாலும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரங்கள் மத்திய அரசின் கையிலேயே உள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லாத டெல்லி மாநில அரசு வலுவிழந்த அரசாகவே உணரப்படுகிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற பாஜக சதி செய்கிறது என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் மராட்டியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும் எனவே மத்திய அரசின் கீழ் மும்பையை கொண்டு வரும் வகையில் அதை யூனியன் பிரதேசமாக மாற்ற பாஜக திட்டமிடுவதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் எம்பியுமான சஞ்சய் ராவத் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாட்டின் தலைநகர் டெல்லி மாநிலமாக இருந்தாலும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரங்கள் மத்திய அரசின் கையிலேயே உள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லாத டெல்லி மாநில அரசு வலுவிழந்த அரசாகவே உணரப்படுகிறது. இதேபோல காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அது இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது முழுக்க முழுக்க அப்பகுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இதேபோல மும்பை மாநகரை யூனியன் பிரதேசமாக மாற்றி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட திட்டமிடுவதாக சிவசேனா குற்றம் சாட்டுகிறது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் இது தொடர்பாக செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான சதித்திட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விவாதித்திருக்கிறது. இது தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டு நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது இரண்டு மாதங்களாக அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இறை ஆதாரப்பூர்வமாக நான் கூறுகிறேன், இதற்கான ஆதாரங்கள் என்னிடத்தில் உள்ளது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவும் அறிந்திருக்கிறார். இந்த சதித்திட்டத்தில் பாஜகவின் முன்னணி எம்பி களில் ஒருவரான கிரிட் சோமையா மற்றும் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் முக்கிய தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே மும்பையில் மராத்தியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

எனவே மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் மும்பை நகரத்தை கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. விரைவில் பாஜக எம்பி சோமையா தலைமையிலான குழு மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது. இவ்வாறு சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
