ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசை கண்டித்து மார்ச் 25 ஆம் தேதியில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசை கண்டித்து மார்ச் 25 ஆம் தேதியில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. தமிழக அரசின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2 ஆவது காகிதமில்லா பட்ஜெட்ட தாக்கல் செய்யப்பட்டது. இந்த பஜ்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பட்ஜெட்டுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மார்ச் 25 ஆம் தேதி பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 18 ஆம் தேதி பட்ஜெட்டை தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனிடையே தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அந்த வகையில் பஜ்ஜெட் மீதான விவாதம் இன்று 2வது நாளாக நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பஜ்ஜெட் குறித்த எதிர்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இருந்த போதிலும் எதிர்கட்சிகள் தமிழக பஜ்ஜெட் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பட்ஜெட்டுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மார்ச் 25 ஆம் தேதி பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 25 ஆம் தேதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
