Asianet News TamilAsianet News Tamil

உதயநிதி மீது வழக்கு பதியனும்.. சேகர்பாபுவை பதவியை விட்டு நீக்கனும்-ஆளுநரிடம் அதிரடியாக புகார் அளித்த பாஜக

சனாதன ஒழிப்பு தொடர்பாக பேசிய உதயநிதி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரியும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய கோரி ஆளுநரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். 
 

BJP complains to Governor demanding action against Ministers Udayanidhi and Shekharbabu Kak
Author
First Published Sep 7, 2023, 11:45 AM IST

சனாதன ஒழிப்பு- உதயநிதி பேச்சு சர்ச்சை

சென்னையில் சனாதனம் ஒழிப்பு மாநாடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சார்பாக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் மனுவும் கொடுத்து வருகின்றனர். மேலும் அயோத்தியை சேர்ந்த சாமியார் உதயநிதியின் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்தநிலையில் பாஜகவினரின் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக உதயநிதி அறிவித்தார். 

BJP complains to Governor demanding action against Ministers Udayanidhi and Shekharbabu Kak

ஆளுநரிடம் பாஜக புகார்

இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் உத்தரவிடக் கோரியும்,

அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குங்கள்

அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் இன்று தமிழக பாஜக  மூத்த தலைவர்கள், தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சாமியாரின் உருவ பொம்மையை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. சட்டப்படி பார்த்துக்குவோம்-உதயநிதி அறிவிப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios