புதுக்கோட்டை

அதிமுகவை ஒன்று சேர்த்து கூட்டணி வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றும் இக்கூட்டணியில் ரஜினியும் இருக்கிறார் என்றும் அதற்காகவே ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி கூடுதல் தகவலாக, "கூட்டணி குறித்து முடிவெடுக்கதான் இந்த பயணம்" என்றும் "இந்தக் கூட்டணியில் ரஜினி கூட இருக்கலாம்" என்றும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.