Asianet News TamilAsianet News Tamil

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் !! யார் ? யார் ? எந்தெந்த தொகுதியில் போட்டி !! அதிரடி தகவல் …

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

BJP candidate list in tamilnadu
Author
Chennai, First Published Feb 25, 2019, 9:42 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக  கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக  உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் அதிமுக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

BJP candidate list in tamilnadu

அதே நேரத்தில் மற்றொரு புறம் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், 6 தொகுதிகள் எவை என்பது கண்டறியப்பட்டுவிட்டன. அதற்கு பாமகவும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஒரு தொகுதி மட்டும் தான் எது என்பது பேச்சுவார்த்தையில் உள்ளது.

BJP candidate list in tamilnadu

அதேபோல், அதிமுக  கூட்டணியில் உள்ள பாஜவுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் வடசென்னை தொகுதியை பாஜக  விரும்பவில்லை. அதற்கு மாற்றாக திருப்பூர் அல்லது தஞ்சாவூர் தொகுதியை அந்த கட்சி கேட்டு வருகிறது.

BJP candidate list in tamilnadu

அதே நேரத்தில், 4 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக  வேட்பாளர்கள் யார் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

BJP candidate list in tamilnadu

மேலும், பாஜகவுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும், தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தமும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது.  இது குறித்து அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios