பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு 5,77,777 வாக்குகளைப் பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திரௌபதி முர்மு எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவைவிட 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பழங்குடியின சமூகத்திலிருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் திரௌபதி ஆவார். தற்போது அவரது வெற்றியை பாஜகவினர் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அவரது சொந்த மாநிலமான ஒடிஷாவில் வெற்றிக் கொண்டாட்டம் கலைகட்டியுள்ளது.

நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் நிறைவடைகிறது, எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற்றது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தலைவர், ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு களமிறக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள்: நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராகிறார் திரவுபதி முர்மு... பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி!!
இதேபோல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களமிறக்கியது, கடந்த 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அதை எண்ணும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இதையும் படியுங்கள்: இந்திய குடியரசு தலைவருக்கு சம்பளம் எவ்வளவு .? அவருக்கு உள்ள சலுகைகள், அதிகாரங்கள் என்ன தெரியுமா.?
வாக்கு எண்ண தொடங்கிய ஆரம்ப முதல் இருந்து திரௌபதி முர்மு ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன, இந்த சுற்றின் துவக்கத்தில் முர்மு 748 வாக்குகளில் 540 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். குடியரசுத்தலைவர் தேர்தலைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு எம்பியன் வாக்குகளின் மதிப்பு 700 ஆகும், அதே முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா 208 வாக்குகள் பெற்றிருந்தார்.

இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் செல்லுபடியான 1138 வாக்குகளில் முர்மு 809 வாக்குகளும், சின்கா 329 வாக்குகளும் பெற்றனர்.
மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 1133 வாக்குகளில் திரௌபதி முர்மு 812 வாக்குகளும் சின்கா 521 வாக்குகளும் பெற்றனர். இந்தக் கடைசி சுற்றில் கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மிசோரம், ஒடிசா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை காட்டிலும் 50 சதவீதம் கூடுதலாக வாக்குகளைப் பெற்று திரோபதி முர்மு அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா 25ஆம் தேதி நடைபெற உள்ளது அதற்கு ஒரு நாள் முன்னதாக தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது குறிப்பிடதக்கது.
