திமுகவில் இருந்து மிக விரைவில் முக்கிய புள்ளி ஒருவர் பாஜகவில் சேர போகிறார் என்ற தகவல் ஸ்டாலின் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழக அரசியலையும் அதிர வைத்துள்ளது.  

திமுகவில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் வி.பி.துரைசாமி. அவரது இந்த அதிரடி ஸ்டாலின் மட்டுமல்ல, திமுகவின் முக்கிய தலைவர்கள் பலருக்கும் பெருத்த அதிர்ச்சியை கொடுத்தது.கூடுதல் அதிர்ச்சியாக ஆளுநர் பதவி கொடுக்க போகிறது பாஜக என்ற செய்தி தான்.

அவரைத் தொடர்ந்து மேலும் பல முக்கிய விஐபிக்கள் திமுகவில் இருந்து பாஜக பக்கம் தாவுவார்கள் என்று பேசப்பட்டது. இது தொடர்பாக ஒரு முக்கிய அசைன்மெண்டும் வி.பி. துரைசாமியிடம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

இவரைத் தொடர்ந்து இன்னொரு ஒரு விக்கெட் இப்போது விழுந்திருக்கிறது என்பது பாஜக தரப்பில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கும் முக்கிய தகவல் ஆகும். இதனை பாஜக நிர்வாகிகளில் ஒருவரான ஏ.பி.முருகானந்தம் உறுதியாக தமது டுவிட்டர் பக்கத்தில்  கூறி இருக்கிறார்.

முக்கியமான கட்சியிலிருந்து ஒரு பெரும்புள்ளி, வெளியே வரக் காத்திருக்கிறது..பெயரின் முதல் எழுத்து நாளை வெளியிடப்படும்.

 

முக்கியமான கட்சியில் இருந்து ஒரு பெரும்புள்ளி, வெளியே வரக் காத்திருக்கிறது. பெயரின் முதல் எழுத்து நாளை வெளியிடப்படும் என்று மே 31 ஆம் தேதி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். பின்னர் ‘முதல் எழுத்து P’ என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ‘PK’ எனத் தெரிவித்திருக்கிறார்.

பாஜக நிர்வாகிகளில் முக்கிய நபர் ஏ.பி.முருகானந்தம். மாநில தலைவர் ரேசில் முதல் 3 நபர்களில் இருந்தவர். முக்கியமான கட்சியில் இருந்து ஒரு பெரும்புள்ளி வெளியே வரக் காத்திருக்கிறார் என அவர் கூறியிருப்பதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘PK’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் திமுகவின் அரசியல் ஆலோசகராக உள்ள  ‘PK’ ஆக இருக்குமோ என்ற விவாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் திமுக எம்எல்ஏ பி.கே. சேகர்பாபு என்பவர் தான் அவர் என்றும் தகவல்கள் சூறாவளியாய் சுற்றி வருகிறது. தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் படு ஸ்பீடாக போய்க் கொண்டிருக்கிறது.