ராகுல் காந்தியின் வெளிநாட்டு தொடர்பு.. அம்பலப்படுத்திய குலாம் நபி ஆசாத் - கையில் எடுத்த பாஜக.!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம் நபி ஆசாத் அளித்துள்ள பேட்டி ஒன்று காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

BJP attacks Rahul Gandhi using Ghulam Nabi Azad interview

குலாம் நபி ஆசாத் ஏசியாநெட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி தொழில் அதிபர் அதானியுடன் தொடர்பு வைத்திருப்பதாக ராகுல் காந்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவரும் அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர். இதை என்னால் ஆதாரபூர்வமாக சொல்ல முடியும்.

BJP attacks Rahul Gandhi using Ghulam Nabi Azad interview

ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும். வெளிநாட்டுக்கு போய் அவர் யாரை சந்திக்கிறார் என்று என்னால் ஆதாரத்துடன் தகவல் தர முடியும்.  பாத யாத்திரை நடந்து விட்டதால் ராகுல் காந்திக்கு செல்வாக்கு அதிகரித்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி எந்த செல்வாக்கும் ராகுலுக்கு அதிகரித்து விட்டதாக எனக்கு தெரியவில்லை.

இதையும் படிங்க..Exclusive : ராகுல்காந்தியின் வெளிநாட்டு தொடர்பு! அம்பலப்படுத்தும் குலாம் நபி ஆசாத்!

சூரத் கோர்ட்டுக்கு அவர் சென்ற போது ஒருவர் கூட அவரை வரவேற்க வில்லை. இதிலிருந்தே அவரது எம்.பி. பதவி பறிப்பை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது” என்று கூறி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இதுபற்றி தற்போது பாஜக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறிய குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் இன்று கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொழிலதிபர்களின் உத்தரவின் பேரில் காந்தி நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார். 

காங்கிரஸ் தலைவர்கள் பல ஊழல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ராகுல் காந்தி ஏன் மௌனம் சாதிக்கிறார் என்றும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி - அதானி குறித்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்தியை தற்போது பாஜக திருப்பியடிக்க ஆரம்பித்துள்ளது. குலாம் நபி கிளப்பிய சர்ச்சை காங்கிரஸ் மட்டுமல்லாமல், டெல்லி அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!

இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios