கள்ளக்குறிச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள சங்கராபுரத்தில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர் சிகிச்சையில் இருந்தவர்களின் மேலும் ஒருவர் பலியாக உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

இந் நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார். நடந்த விவரங்களை கேட்டறிந்த அவர் அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார்.
இது குறித்து விவரத்தை அண்ணாமலை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
கள்ளக்குறிச்சிமாவட்டம், சங்கராபுரத்தில்நேற்றுஏற்பட்டபட்டாசுகடைதீவிபத்தில்பாதிக்கப்பட்டோரைஇன்றுகள்ளக்குறிச்சிஅரசுமருத்துவமனையில்நேரில்சந்தித்துஆறுதல்கூறினேன்.

இந்ததுயரமானசம்பவத்தில்இருந்துமீண்டுவருவோம்என்கின்றஅவர்களுடையநம்பிக்கையால்ஆறுதல்அடைந்தேன்.
இந்தவிபத்தில்உயிரிழந்தஆறுஆத்மாக்களும்சாந்தியடையஆண்டவனைபிரார்த்திக்கிறேன்! மேல்சிகிச்சைக்குதேவையானஉதவிகளை @BJP4TamilNadu செய்யும்என்றுஉறுதியளித்துஇருக்கின்றேன்.

தமிழகமுதலமைச்சர்அவர்கள்அறிவித்துள்ளநிவாரணத்தொகையைஉயர்த்திக்கொடுக்குமாறுவேண்டுகோள்விடுக்கின்றேன்என்று தெரிவித்துள்ளார்.
