Asianet News TamilAsianet News Tamil

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20க்கு கொள்முதல்… அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்… பரபரக்கும் அறிவாலயம்

கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை என்றும் தமிழக பாஜக அண்ணாமலை கூறி உள்ளார்.

BJP Annamalai twitter
Author
Chennai, First Published Oct 20, 2021, 7:25 PM IST

சென்னை: கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை என்றும் தமிழக பாஜக அண்ணாமலை கூறி உள்ளார்.

BJP Annamalai twitter

தமிழகத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார். அதாவது தமிழகத்தில் ஒரு யூனிட் விலையை உற்பத்தி விலையை விட 4 மடங்கு அதிக விலை கொடுத்து(ரூ.20) வாங்க உள்ளது.

இதன் மூலம் ஏற்கனவே கடனில் மூழ்கி இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேலும் கடனில் தள்ளப்படும். அதற்கான ஆதாரங்கள் உள்ளது, அதை வெளியிட தயார் என்று கூறி இருந்தார்.

BJP Annamalai twitter

அவரது இந்த பேட்டிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி தந்திருந்தார். அதில் அண்ணாமலை ஆதாரம் உள்ளது என்று கூறுகிறார். எப்போது எங்கே அவர் அதை வெளியிட்டாலும் நான் வர தயார், ஆதாரங்களை வெளியிட வில்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இந் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்ய பட்டுள்ளது!  உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios