தமிழகத்தில் அதிமுகவின் போக்கு வேல்யாத்திரை மருத்துவகல்லூரி படிப்பில் கிராமபுற மாணவர்களுக்கு 7.5சதவீதம் உள்ளிட்ட தடாலடி வேலைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரங்கேற்றி வருகிறார்.அது பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் விழுந்துவிடும் போல் பார்ப்பவர்களுக்கு தெரிகிறது. ஆனால் இதுயெல்லாம் அரசியல் பிளான் அதாவது சிறுபான்மையினரை கவர்செய்யவதற்காக இப்படியொரு நாடகம் நடப்பதாக குற்றம் சுமத்தி வருகின்றார்கள் மாற்றுக்கட்சியை சார்ந்தவர்கள்.அண்மையில், அமைச்சர்கள் அத்துமீறி பேசினால் அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்னை வரும் என்றெல்லாம் ஹெச் ராஜா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி.கார்த்தி சிதம்பரம், “அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று நினைத்தாலும் பாஜகவினர் அதிமுகவை விட்டு போகப் போவதில்லை. தமிழகத்தில் உள்ள பாஜகவிற்கும், முருகனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பாஜக தலைவர் முருகனுக்கு நிஜமான கடவுள் முருகனை பற்றிய சுலோகம் தெரியுமா? வேல் யாத்திரை முழுக்க முழுக்க அரசியலுக்காக எடுக்கப்படுகின்ற ஒரு ஊர்வலம்.

வேல் யாத்திரையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதை பாதுகாக்கும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. கமல்ஹாசன் மூன்றாம் அணியையும் வைக்கலாம்,மூன்றாம் பிறையையும் அமைக்கலாம். அது அவரது உரிமை” எனக் கூறினார்.