Asianet News TamilAsianet News Tamil

தனியா, கெத்தா ஜெயிப்போம்...! புதிதாக யாருடைய ஆதரவும் தேவையில்லை... மோடி அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

BJP and its alliance will won itself - says PM Modi
Author
Chennai, First Published Apr 9, 2019, 10:35 AM IST

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி நூலிழையில் மெஜாரிட்டி பெறும் என்றும் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் என்றும் கருத்துக்கணிப்புகளில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஒரு வேளை மோடி அரசுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஆந்திராவில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலங்கானாவில் உள்ள டி.ஆர்.எஸ். கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைப்பார் என்றும் கருத்துக்கணிப்புகளில் கூறப்படுகின்றன.

BJP and its alliance will won itself - says PM Modi
பாஜக தலைமையும் இந்த இரு கட்சிகளுடன் நல்ல தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. எனவே இந்த இரு கட்சிகளும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் முக்கிய இடத்தை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் பாஜக கூட்டணி தனிபெரும்பான்மை பெறும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த அவர், இதைத் தெரிவித்துள்ளார்.

 BJP and its alliance will won itself - says PM Modi
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், டி.ஆர்.எஸ். கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டதா என்ற கேள்விக்கு மோடி பதில் அளிக்கும்போது, “தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பரிபூரண பெரும்பான்மை கிடைக்கும். இருக்கும் கூட்டணி கட்சிகளிடன் உதவியுடனேயே பெரும்பான்மையைப் பெறும். புதிதாக எந்தக் கட்சிகளுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.” என்று தெரிவித்தார்.BJP and its alliance will won itself - says PM Modi
ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் முறையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ். கட்சிகள் அதிக இடங்களில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸும் பாஜகவும் வெற்றி கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios