இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவிருக்கும் இரண்டே மாநிலங்கள் மேற்கு வங்கமும், கேரளாவும் தான். வேறு எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவு இல்லை. இடது சாரி கட்சிகளுக்கு நேரெதிர் அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனை கொண்ட வலதுசாரி கட்சி பாஜக.

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் மட்டும் இடதுசாரிகளுக்கு ஓரளவிற்கு ஆதரவாக இருந்தாலும், தொடர்ச்சியாக 2வது முறையாக மத்தியில்  பாஜகவை அமர்த்தியிருப்பதன் மூலம் மக்களின் ஆதரவு(ஒருசில மாநிலங்களை தவிர) பாஜகவிற்கே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இடதுசாரி கொள்கைகளுக்கு இந்தியாவில் எப்போதுமே வரவேற்போ ஆதரவோ இருந்ததில்லை.

இடதுசாரி கட்சிகளுக்கு ஓரளவிற்கு ஆதரவிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் தமிழகம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 2 மாநிலங்களிலும் காலூன்றும் விதமாக பாஜக மிகத்தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சியின் டுவீட்டிற்கு பதிலடி கொடுத்து, கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்கும் பாஜக, மற்றொரு சிக்ஸரை அடித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் தலைவரும் புரட்சியாளருமான டெங் ஜியோபிங்கின் நினைவுதினத்தையொட்டி, அவரது புகழ்பாடி, புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சி டுவீட் செய்திருந்தது.

அதற்கு பதிலளித்து டுவீட் செய்துள்ள பாஜக, அன்புள்ள மேற்கு வங்க மற்றும் கேரள மக்களே.. இடதுசாரி கட்சிகள் சீன ஆதரவு கட்சிகள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. காலவாதியான கம்யூனிஸ்ட் கொள்கை, கம்யூனிஸ்ட் கபடநாடகம், கம்யூனிஸ்ட் கொடுங்கோண்மையை புறக்கணியுங்கள். கம்யூனிஸ்ட்டுகளுக்கு நமது மக்கள் மீதோ ராணுவத்தின் மீதோ பற்றே கிடையாது என்று பாஜக டுவீட் செய்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் தலைவருக்கு ஆதரவாக டுவீட் செய்து, தாங்கள் சீனாவிற்கு ஆதரவானவர்கள் தான் என்பதை தாங்களே ஒப்புக்கொள்ளும் விதமாக டுவீட் செய்து, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற கதையாக சிக்கியது கம்யூனிஸ்ட். சும்மா விடுமா பாஜக..? கம்யூனிஸ்ட்டின் குட்டை மக்களிடம் அம்பலப்படுத்தி, அட்வைஸையும் போட்டுவிட்டது.