மூத்த ராணுவ தளபதியை மீறி பிபின் ராவத் ராணுவ தலைமை தளபதியாக மோடியால் நியமிக்கப்பட்டார். ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற மறுநாளே சி.டி.எஸ். வடகிழக்கில் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் ராவத் முக்கிய பங்கு வகித்தார்.

நாட்டின் முதல் சிடிஎஸ் பாதுகாப்பு படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் (Madhulika Rawat Latest News) தமிழ்நாட்டில் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த போது ஹெலிகாப்டரில் 14 பேர் இருந்தனர். அதில் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்ந கோர விபத்து ஒட்டு மொத்த இந்திய தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்துக்காண காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உயிரழந்த படைத்தளபதி மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படைத்தளபதியின் மனைவி மதுலிகா ராவத் மற்றும் அவரது குடும்ப பின்னணி குறித்து வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அவர் மத்திய பிரதேசத்தின் ராஜ வம்சத்தை சேர்ந்தவர் என்பதுதான் அது. 

யார் மதுலிகா ராவத்..??

ஜெனரல் பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா, மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டத்தில் உள்ள சோஹாக்பூர் சமஸ்தானத்தின் மகள் ஆவார். அவரது தந்தை குன்வர் மிருகேந்திர சிங் சோஹாக்பூர் கர்ஹியின் உள்ளூர் எழுத்தராக இருந்தார். கோட்மா சட்டமன்ற தொகுதியில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். ஆனால் தற்போது அவர் இல்லை. சிடிஎஸ் விபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் ஷாஹ்டோலைச் சேர்ந்தவர். அவரது ஆரம்பக் கல்வி ஷாஹ்டோலில் துவங்கினார். அதன் பிறகு குவாலியரில் உள்ள சிந்தியா பெண்கள் பள்ளியில் பயின்றார், பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பட்டம் பெற்றார். விபின் ராவத் கேப்டனாக இருந்தபோது 1986ல் விபின் ராவத்தை திருமணம் செய்து கொண்டார் மதுலிகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர், மூத்த மகள் கிருத்திகா ராவத், இளைய மகள் தாரணி ராவத். மதுலிகா ராவத்துக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். 

மூத்த சகோதரரின் பெயர் ஹர்ஷ்வர்தன் சிங், இளைய சகோதரரின் பெயர் யஷ்வர்தன் சிங். ராணுவத்தின் பல நலத்திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் மதுலிகா ராவத் ஒரு பகுதியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். விபின் ராவத் கடைசியாக 2011-12 இல் மாமியார் வீடான ஷாஹ்தோலுக்கு வந்தார். பிபின் ராவத்தின் தந்தை லக்ஷ்மண் சிங் ராவத்தும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதை அனைவரும் அறிந்ததே, அவரது தந்தை கூர்கா ரெஜிமெண்டில் லெப்டினன்ட் ஜெனரல் பொறுப்பையும் வகித்தவர் ஆவார். இவரது தாயார் உத்தர்காசி எம்எல்ஏவான கிஷன் சிங் பர்மாரின் மகள். 

சிடிஎஸ் பிபின் சிங் ராவத், பிரதமர் மோடியின் மிகவும் நம்பகமான ராணுவ அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஆவார். மூத்த ராணுவ தளபதியை மீறி பிபின் ராவத் ராணுவ தலைமை தளபதியாக மோடியால் நியமிக்கப்பட்டார். ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற மறுநாளே சி.டி.எஸ். வடகிழக்கில் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் ராவத் முக்கிய பங்கு வகித்தார். அவர் 2015 ஆம் ஆண்டில் மியான்மரில் எல்லை தாண்டிய நடவடிக்கையை மேற்கொண்டார், இதில் இந்திய இராணுவம் NSCN-K தீவிரவாதிகளுக்கு வெற்றிகரமாக பதிலடி கொடுத்தது. அதேபோல் மதுலிகா ராவத் ராணுவ அதிகாரிகள் மனைவிகள் நல சங்கத்தின் தலைவராக இருந்தார். இதனுடன், அவர் இராணுவ வீரர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் சார்ந்திருப்பவர்களின் நலனுக்காக பணியாற்றினார். இதனால் அவரை தியாகத்தின் உரிவம் என்று இந்திய குடியரசு மாளிகை அவருக்கு தெரிவித்துள்ள இரங்களில் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.