Asianet News TamilAsianet News Tamil

Bipin Rawat: உயிர் போகும் 'திக் திக்' நிமிடங்கள் முன்பு... பிபின் ராவத் பேசிய 'அந்த' வார்த்தை....!!

எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று உயிர் போகும் தருவாயில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறிய தகவல்கள் வெளியாகி உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Bipin rawat last words helicopter crash
Author
Nilgiri Hills, First Published Dec 16, 2021, 8:34 AM IST

எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று உயிர் போகும் தருவாயில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறிய தகவல்கள் வெளியாகி உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Bipin rawat last words helicopter crash

கடந்த 8ம் தேதி தேசத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட போகிறது என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த ஒரு விபத்து தேசத்தையும் மட்டுமல்ல உலகத்தையும் புரட்டி போட்டது.

ஹெலிகாப்டரில் சென்ற முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் விபத்தில் பலியாகினர். அந்த விபத்தில் தப்பிய கேப்டன் வருண் சிங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

Bipin rawat last words helicopter crash

அதில் லேட்டஸ்ட்டாக, உயிர் போகும் கடைசி சில நிமிடங்களில் பிபின் ராவத் என்ன சொன்னார் என்பது பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்து நிகழ்ந்த பகுதியில் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக களத்தில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

விபத்து எப்படி ஏற்பட்டது, என்ன நடந்தது, ஹெலிகாப்டரில் இருப்பவர்கள் யார் என்ற விவரங்கள் எதையும் அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை. விபத்தில் சிக்கிய அனைவரையும் கிராம மக்கள் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Bipin rawat last words helicopter crash

பிபின் ராவத்தையும் ஆம்புலன்சில் கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஆம்புலன்சில் இருந்தவர்கள் பிபின் ராவத்தின் கடைசி நேர சம்பவங்களை பற்றியும், அப்போது நடந்தவற்றையும் தங்களது அனுபவத்தை பகிர்ந்து இருக்கின்றனர்.

சம்பவ இடத்தில் ஆம்புலன்சை இயக்கிய ஓட்டுநர் ராமமூர்த்தி கூறி இருப்பதாவது: நண்பகல் 12.36 மணிக்கு விபத்து நடந்தது பற்றி உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது. சரியாக 12.40 மணிக்கு எல்லாம் சம்பவ பகுதிக்கு சென்றுவிட்டோம்.

அங்கு ஆம்புலன்சில் சென்றவர்கள், பிபின் ராவத்தை எங்கள் வாகனத்துக்கு கொண்டு வந்தனர். வண்டியில் இருப்பது பிபின் ராவத் என்பது எங்களுக்கு தெரியாது. மிக அவசரம் என்று சூழலில் பார்க்கும் போது புரிந்ததால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தேன் என்று கூறியிருக்கிறார்.

Bipin rawat last words helicopter crash

மருத்துவ உதவியாளர் விக்னேஷ் கூறியதாவது: விபத்து நடந்த ஹெலிகாப்டரில் இருப்பது பிபின் ராவத் என்று எங்களுக்கு தெரியாது. தெரியாமலே அவரை ஆம்புலன்சில் ஏற்றி வந்தோம்.

அடுத்த அதே ஆம்புலன்சில் வருண்சிங்கையும் ஏற்றினார்கள். 2 பேரையும் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு பறந்தோம். அவர்களை உயிரோடு கொண்டு போய் சேர்த்துவிட்டோம். அப்போது பிபின் ராவத் சில வார்த்தைகள் பேசினார்.

அவர் பேசிய இந்தி வார்த்தைகள். ஆகையால் அது என்னவென்று எனக்கு சரியாக புரியவில்லை. பக்கத்தில் இருந்த மருத்துவ அதிகாரியிடம் அவர் ஏதோ பேசினார். எப்படியாவது தம்மையும், எல்லோரையும் காப்பாற்றுமாறு அவர் கூறியது மட்டும் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது என்று கூறி உள்ளார்.

Bipin rawat last words helicopter crash

சம்பவம் நடந்தது எப்படி என்றும், யார், யார் ஹெலிகாப்டரில் வந்தனர்? எங்கிருந்து வந்தனர் என்பது பற்றியும் அந்த தருணத்தில் யாருக்கும் முதலில் தெரியாமல் தான் இருந்திருக்கிறது. நேரம் செல்ல செல்ல தான் சம்பவத்தின் முக்கியத்துவம் பற்றியும், பயணித்தவர்கள் விவரங்களும் வெளியாக அதன் பின்னரே காட்டேரி, நஞ்சப்ப சத்திரம் பகுதி வாழ்மக்களுக்கு விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன. தங்கள் பகுதியில் நாட்டின் முக்கிய நபரை இழந்துவிட்டோமே என்று இன்னமும் அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் வேதனை இருப்பதை உணரமுடிகிறது….!!

Follow Us:
Download App:
  • android
  • ios