விருதுநகர் அருகே பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குலதெய்வக் கோயிலில் 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடுப்போனது.

விருதுநகர் அருகே உள்ள மூளிப்பட்டியில் ஸ்ரீதவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ கோயிலான இக்கோயிலில், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் கோயில் பூசாரி ஸ்ரீதர் என்பவர் கோயிலைத் திறக்க வந்தபோது கோயில் மண்டப பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன.உள்ளே சென்று பார்த்தபோது இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த இரு உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 5 ஆயிரம் திருட்டுப்போயிருந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த கோயில் நிர்வாக செயலர் சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிந்து உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.