லல்லு பிரசாத் மகன் மற்றும் மருகளுக்கும்  இடையேயான கருத்து வேறுபாடு  வீதிக்கு வந்திருக்கிறது  லல்லுவின் மகனும் , மனைவியும் மருமகளை கொடுமைப்படுத்துவதாக பெண்ணின் குடும்பத்தார்  குற்றம்சாட்டியுள்ளனர்.  பீகார் மாநில முன்னாள் முதல்வர்  லல்லு பிரசாத் யாதவின் மூத்தமகன் தேஜ்பிரதாப் யாதவ்,   இவரின்  தனது தாய்  ராப்ரி தேவி அமைச்சராக இருந்தார்,  

இப்போதும் இவர் பீகார் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார் .  இவருக்கு பிஹாரின் முன்னாள் முதல்வர்களில் ஒருவரான துவாரகா பிரசாத் ராயின் பேத்திகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துவைத்தார்   லல்லு . ஐஸ்வர்யா  ராயின் தந்தை சந்திரிகா ராயும் ராஷ்ட்ரிய ஜனதாதள் எம்எல்ஏவாக இருக்கிறார் . 

இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட தேஜ்பிரதாப் - ஐஸ்வர்யாவும் திருமணமான சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.  அதற்கு காரணம் தேஜ்பிரதாப்  திடீர் திடீரென நான்தான் கடவுள் நான்தான் சிவன் நான்தான் ராதை என்று பெண் வேடமணிந்து வீட்டுக்குள் வலம் வருகிறாராம் ,  இதை நேரில் பார்த்த ஐஸ்வர்யா ராய்,  தன் கணவரை கண்டித்துள்ளார் எனவே ,  மாமியார் ராப்ரி தேவி, மற்றும் அவரின்  மகள் விசா பார்தியும் சேர்ந்து  ஐஸ்வர்யாவை தாக்கியதாக சொல்லப்படுகிறது .  இதுதொடர்பாக சாஸ்திரிநகர்  காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது .  

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் இந்நிலையிலிருந்து மாமனார் வீட்டில் இருக்கும் தன் தாய் வீட்டு சீதனத்தை  திருப்பிக் கொடுக்கும்படி ஐஸ்வர்யா கோரியிருந்தார் .  இந்நிலையில் மாமியார் ராப்ரி தேவி சுமார் 300 மீட்டர் தொலைவில் இருக்கும் ஐஸ்வர்யா ராயின் வீட்டிற்கு 2 மினி வேன்களில் பிரிட்ஜ் ,  வாசிங் மிசின் கட்டில் ,  பீரோ என தனது மருமகன் பயன்படுத்தி வந்த பொருட்களை ஏற்றி அனுப்பி உள்ளார்.  அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் நாங்கள் கேட்டது இந்த ஓட்டை உடைசல் சாமான்களை அல்ல எங்கள் மகளுக்கு போட்டு அனுப்பிய உடைகளை நகைகளை. 

அவள் அங்கு வைத்துவிட்டு வந்த பணம் உள்ளிட்டவைகளைத்தான்,  இவர்கள் இப்போது அனுப்பி இருக்கிற இந்த பாத்திரங்கள் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் தங்களிடம் ஒப்படைக்க வேண்டியவை எனவே அவற்றைத் திருப்பி எடுத்துச் செல்லும்படி தெரிவித்துள்ளார் .  அத்துடன் அவர்கள் வீட்டில் இருந்து வந்திருக்கிற இந்த பாத்திரங்களில் போதை பொருட்களை வைத்து அனுப்பி தங்களை சிக்கவைக்க அவர்கள் சதி செய்வார்கள் எனவே இதை வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என ஐஸ்வர்யாவின் தந்தை சந்திரிகா ராய் மறுத்துவிட்டார் .  

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  விசா பார்தி , இதெல்லாம்  வெறும்  விளம்பரம்,  ஒரு ஸ்டண்டிற்காக செய்யப்படுகிறது அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த பொருட்களை வீட்டிற்கு எடுத்துக் கொள்ளட்டுமே என தெரிவித்துள்ளார் முதல்வர் வீட்டு விவகாரம் தற்போது தெருவுக்கு வந்திருப்பது பீகார் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது .