பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களமிறங்கினர். கொரோனா தொற்றுக்கு இடையே நடந்த இத்தேர்தலில் சராசரியாக 53 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின.


பீகாரில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கும் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதளம் - காங்கிரஸ் - இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சிராக் பஸ்வானும் களத்தில் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.