பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டன. பீகாரில் உள்ள 55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதாதளத்துக்கும் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணிக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் 122 தொகுதிகளை வெல்லும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்.
வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் ஆர்.ஜேடி. - காங்கிரஸ்- இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணி  80 தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி  60 தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளது. மொத்தம் 16 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தொடக்க சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆர்.ஜேடி. காங்கிரஸ் கூட்டணி சொற்ப எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளது.