bihar cm nithish arrived chennai

சென்னையில் நடக்கவிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் வைரவிழாவில் பங்கேற்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சென்னை வந்தார்.

கருணாநிதியின், 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை பணி வைர விழா ஆகியவை திமுக தொண்டர்களால் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இன்று மாலை, 5:00 மணிக்கு தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தலைமையில் கருணாநிதியின் வைரவிழா நடைபெறவுள்ளது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலர் துரைமுருகன் வரவேற்கிறார்.

விழாவில், காங்., துணைத் தலைவர் ராகுல், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர், டி.ராஜா ஆகியோர் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா சென்னை வந்தடைந்தார்.

அவரை தொடர்ந்து விழாவில் பங்கேற்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் உள்ளிட்ட காங்கிரசார் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

இந்நிலையில், தற்போது, கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விமானம் மூலம் சென்னை வந்தார்.