biggest accident on Guindy Railway Station

மும்பை எல்பின்ஸ்டோன் ரெயில் நிலையத்தில் நிகழ்ந்த விபத்து போல் கிண்டி ரெயில்நிலையத்திலும் பயணிகளின் கூட்ட ெநரிசலால் விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது.

அதை தவிர்க்கும் முன்பாக, அங்கு விரைவில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மற்றொரு நடைமேம்பாலம் கட்ட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கிண்டி ரெயில் நிலையத்துக்கு நாள்தோறும் 200 ரெயில்கள் வந்து செல்கின்றன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரெயில் நிலையத்தில் இறங்கி நகரின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறார்கள். இதனால், வாரத்தின் 6 நாட்களும் கிண்டி ெரயில் நிலையம் மிகுந்த பரபரப்பாகவே பயணிகள் கூட்டம் நிரம்பி இருக்கும். 

ஆனால், ஒரு ரெயில் வந்தவுடன் அதிலிருந்து இறங்கும் பயணிகள் ஒரே நேரத்தில் ரெயில்நிலையத்துக்கு வெளியே செல்ல இரு நடைமேம்பாலம் மட்டுமே இருக்கிறது. அதுவும் மிகப்பழைமையானது. 

 இதில் வயதானவர்கள் முதல், மாணவர்கள் வரை அனைவரும் காலை நேர பரபரப்பில் செல்ல வேண்டியது இருப்பதால், தினந்தோறும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதிலும் நடைமேம்பாலத்துக்கு செல்ல வேண்டிய படிக்கட்டுகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால், அதன் உறுதித்தன்மை குறித்து ேகள்வி எழுகிறது. 

கடந்த மாதம் 29ந்தேதி மும்பை எல்பின்ஸ்டோன் ரெயில்நிலையத்தில் கூட்டநெரிசலில் பயணிகள் சிக்கி 23 பேர் பலியானார்கள். அதன்பின்புதான் அனைத்து ரெயில் நிலையங்களிலும் மேம்பாலத்தை புனரமைக்கவும், புதிய மேம்பாலங்கள் கட்டவும் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டார்.