பிக் பாஸ் புகழ் முகேனின் காதலியான நதியா வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் நதியாவின் காதலர் என்றும் கூறப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தனது தனித் திறமையால் அனைவரது நெஞ்சங்களையும் கவர்ந்தவர் முகேன் ராவ்,  மலேசிய தமிழரான இவர்.  யூடியூப்,  ஆல்பம் பாடகர், வெப் சீரியல் நடிகர், என பல துறைகளில் தன் திறமையை காட்டி வருகிறார். முதலில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அபிராமி உடன் நட்பு ஏற்பட்டு பின் அது காதலாக மாறும் வேலையில்,  அபிராமியை புறக்கணித்ததுடன் தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்தப்  பெண்ணின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகேன் இறுதிப்போட்டிக்கு தேர்வானபோது முகேனை முதன் முறையாக காதலிப்பதாக சொன்ன நதியா, அவருக்கு அப்போது வாழ்த்தும் கூறியிருந்தார். 

 

இதனால் நதியாவுக்கும் இடையே காதல் ஓகேவாகி விட்டது என்ன அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.   முகேன் வெற்றியாளராக வெளியில் வந்து அவரின் காதல் வெற்றியடைந்திருக்கிறது என பலர் பாராட்டி வந்தனர்.  இந்நிலையில், முகேனை காதலிப்பதாக கூறிய நதியா வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருக்கு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. முகேனை காதலிப்பதாக கூறப்படும் அந்தப் பெண் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நபரை காதலித்து வருவதாகவும் தெரிகிறது.  இதனால் பிக்பாஸ் முகேனின் காதல் கனவு தகர்ந்துள்ளதாகவும் இதனால் அவரது ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.