Asianet News TamilAsianet News Tamil

ஏர்போர்ட்டில் தரையில் அமர்ந்து முதல்வர் தர்ணா… புதிய இந்தியா..!

லக்னோ விமான நிலையத்தில் சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை போலீசார் தடுக்க அவர் அங்கேயே தரையில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Bhupesh Baghel protest airport
Author
Lucknow, First Published Oct 5, 2021, 7:21 PM IST

லக்னோ:  லக்னோ விமான நிலையத்தில் சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை போலீசார் தடுக்க அவர் அங்கேயே தரையில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Bhupesh Baghel protest airport

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற சம்பவம், பின்னர் வன்முறையாக இப்போது நாடு முழுவதும் பேசு பொருளாகி விட்டது. வன்முறைக்களமாக மாறிவிட்ட லக்கிம்பூரில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பிரியங்கா காந்தியின் கைதுக்கு பின்னர் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

Bhupesh Baghel protest airport

இந் நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களின் உண்மை நிலையை நேரில் பார்வையிட விரும்பினார். ஆனால் லக்னோ விமான நிலையத்தில் இறங்கிய அவரை விமான நிலையத்திலேயே போலிசார் தடுத்து நிறுத்தினர்.

அவர்களின் நடவடிக்கைகயை கண்டு ஒரு கணம் அதிர்ந்து பூகேஷ் பாகல் சற்றும் தாமதியாமல் டக்கென்று தரையில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை செயல் உடனடியாக அங்கிருப்பவர்களை அதிர்ச்சியின் உச்சியில் கொண்டு போய் விட்டுவிட்டது.

Bhupesh Baghel protest airport

நான் லக்கிம்பூர் போகவில்லை, அங்கு தடை உத்தரவு இருப்பது எனக்கு தெரியும், நான் காங்கிரஸ் அலுவலகத்துக்கு செல்கிறேன் என்று அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்களிடம் அவர் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை. அவரை தொடர்ந்து அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

தமது நேரிட்ட தடை அனுபவத்தை பூபேஷ் பாகல் டுவிட்டரில் போட்டோவுடன் பகிர்ந்து இருக்கிறார். லக்னோ  ஏர்போர்ட்டில் இருந்து வெளியே போக என்னை எவ்வித ஆணையும் இன்றி அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios