bharathiraja slam rajini

நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறார் என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக சாடியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'காட்டுப்பய சார் இந்த காளி' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய பாரதிராஜா, தற்போது வெளியாகும் பெரும்பாலான தலைப்புகளில் எனக்கு உடன்பாடில்லை என்றார். காட்டுப்பயசார் காளி என்பதைவிட கண்ணியமான காளி என்று வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

ரசிகன் பாவம்; விவரம் கெட்ட பய. இன்னும் பாருங்க முட்டாளாக்கி வச்சிருக்கோம். பாலாபிஷேகம் பண்ணும்போது அவர் தடுத்து நிறுத்தியிருக்கணும். கட் அவுட்டுக்கு மாலை கூடாது, கண்ணியமாக படம் பார் என்று சொல்லியிருந்தால் பேசாமல் இருந்திருப்பார்கள்.

நாம் எழுதி கொடுத்த வசனத்தை படித்து, பாடல்களைப் பாடி, நாளை நாட்டை ஆளுகிறேன் என்று வந்து நிக்கிறான். ரசிகனைக் கிளப்பிவிட்டு, மேக்சிமம் முட்டாளாக்கிவிட்டு... இப்ப நான் வரேன்னா அவன் என்ன பண்ணுவான்? வா... வா...ன்னுதான் கூப்பிடுவான். ரொம்ப கேவலமான சூழ்நிலை. சினிமாவில் இருந்துகிட்டு நானே இதெல்லாம் பேச வேண்டியிருக்கு என்று நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பயன்படுத்தாமல், அவரை மறைமுகமாக சாடியுள்ளார் பாரதிராஜா.