முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டம், விடுமுறை நாளான இன்று தலைமை செயலகத்தில் கூடியது. கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தித்துக்கு பிறகு ஜெயக்குமார், 7 பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்மானமாக இது அமைந்துள்ளது.

7 பேரின் விடுதலை குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து வந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை பலர் வரவேற்றுள்ளனர். இலக்கிய பண்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா, 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், 7 பேரின் விடுதலை குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது குறித்து இயக்குநர் பாரதிராஜாவிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது பேசிய அவர், 7 பேரின் விடுதலை குறித்த தீர்மானம் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக கூறினார்.