எந்தெந்த வேலைகளில் எவ்வளவு ஊழல் செய்தார்கள் என்ற பட்டியலும் வெளிவரும். முதல்வருடன் சேர்ந்து, 4 அல்லது 5 அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என அ.ம.மு.கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தி புகழேந்தி கூறினார்.

சூலூரில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த பெங்களூரு புகழேந்தி கோவையில் செய்தியாளர்களை சந்திக்கையில்;  தேர்தல் பிரசாரத்தின்போது எப்படி பேச வேண்டும்  என தெரியாமல் முதல்வர் எடப்பாடி பேசுகிறார். ஒரு அமைச்சரே நாக்கை அறுப்போம் என  பேசுவது நாகரீகம் அல்ல. 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் கருத்து தவறு என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார்  கொடுத்திருக்கலாம். ஆனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுவதை பார்த்துவிட்டு, கண்டனம் தெரிவிக்காமல் முதல்வர் மவுனமாக இருப்பது ஏன்? என்று தெரியவில்லை, இன்று நடிகர் நாக்கை அறுப்பேன் என்பவர், நாளை முதல்வரின் நாக்கை அறுப்பேன் என சொல்வார் இந்த அமைச்சர் 

அதனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை உடனடியாக  கைதுசெய்ய வேண்டும். அதுமட்டுமல்ல மந்திரி பதவிக்கு தகுதியில்லாதவர். அவரது மந்திரி  பதவியை, தமிழக முதல்வர் பறிக்க வேண்டும். மேலும் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தது சசிகலாவா? ஜெயலலிதாவா? என்பதை, எடப்பாடி பழனிசாமி சொல்லியே ஆகணும். 

வரும் 23ம் தேதி தேர்தல் முடிவிற்கு பின்னர் முதல்வரின் ஊழல் பட்டியல் வெளியிடுவோம். எந்தெந்த வேலைகளில் எவ்வளவு ஊழல் செய்தார்கள் என்ற பட்டியலும் வெளிவரும். முதல்வருடன் சேர்ந்து, 4 அல்லது 5 அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி. இவ்வாறு புகழேந்தி கூறினார்.