கெஞ்சும் காங்கிரஸ்... மேடையிலேயே அட்டாக் செய்த முதல்வர் முக.ஸ்டாலின்... அதிர்ச்சி கொடுக்க தயாராகும் திமுக..!
திமுகவோ இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தைக்கு காத்திருக்க வேண்டாம். நாம் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துவிடலாம் என்று கூறி கறார் காட்டி வருகிறதாம்.
அனைத்து கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கி அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. பெரும்பாலும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொகுதிப் பங்கீடு என்பது கட்சியின் தலைமையிடத்தில் நடைபெறுவதில்லை. அந்தந்த மாவட்ட அளவிலேயே கூட்டணிக் கட்சிகள் இடங்களை பங்கிட்டுக் கொள்கின்றன.
தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.
அதில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் இதுவரை 15 ஆயிரம் பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். தேர்தல் தேதி அறிவித்தவுடன் தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கான இடங்களைக் கேட்டு பெறுவோம்" என கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார்.
தி.மு.க உடனான பேச்சுவார்த்தைக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளையும் கேட்க உள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார்.
கடந்த ஆண்டு 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73 இடங்களும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138 இடங்களும் பெற்று மிகப் பெரிய வெற்றி பெற்றது.
ஆனால் திமுகவோ இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தைக்கு காத்திருக்க வேண்டாம். நாம் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துவிடலாம் என்று கூறி கறார் காட்டி வருகிறதாம்.
திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினும், அதுதான் சரியாக இருக்கும். நகராட்சி, மாநகராட்சி அளவில் நம்முடைய ஆட்கள் பதவியில் இருந்தால்தான் ஆட்சி நிர்வாகத்தை சரியாக செய்ய முடியும். மேயர்கள் திமுகவில் இருந்து வந்தால் தான் திட்டங்களை எளிதாக கொண்டு செல்ல முடியும் என்று மாவட்ட செயலாளர்களிடம் கூறி விட்டார் என்கிறார்கள். நாம் முன் கூட்டியே வேட்பாளர்களை அறிவித்தால் கூட்டணிகளால் நமக்கு பெரிதாக நெருக்கடி என்று அறிவுரையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக சார்பாக உத்தேச வேட்பாளர் பட்டியல் சில நகராட்சி, மாநகராட்சிக்கு மட்டும் தயார் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி செயல்படுவதன் மூலம் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட்டுகள் கேட்டு தொந்தரவு செய்ய நாட்கள் இருக்காது. திமுக கொடுக்கிற சீட்டுகளை மட்டுமே பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தாதை பொதுவெளியில் மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக் காட்டிய சம்பவம் கூட்டணி விவாதத்தை கிளப்பி உள்ளது. டி.கே.எஸ் இளங்கோவன் இல்ல விழாவில் பேசிய காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, ''முதல்வர் யாரிடத்திலும் அதிகம் பேச மாட்டார். கூட்டணி தலைவர்களுடனும் கூட அதிகம் பேச மாட்டார்'' என மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''நான் அதிகம் பேசமாட்டேன். செயலில் தான் திறமையை காட்டுவேன்,'' என பதிலடி கொடுத்தார்.என்னை பொறுத்தவரை பேச்சைக் குறைத்து, செயலில் திறமையைக் காட்ட வேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டிய நிலையில் தேர்தலை நடத்துகிறோம்’’ என ஸ்டாலின் பேசினார்.'கூட்டணிப் பேச்சின்போதெல்லாம், ஸ்டாலின் நேரடியாக பேசாமல், கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்தே பேச்சு நடத்தி, கூட்டணியை இறுதி செய்வார். 'இதைச் சுட்டிக் காட்ட முயன்ற அழகிரிக்கு, நேற்று ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்' என தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.