அழகு நிலையத்தின் பெண் உரிமையாளரை, திமுக பிரமுகர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது. பெரம்பலூர், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சத்யா என்பவர் இருந்து வருகிறார்.  

திமுகவை சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார். அழகு நிலைய உரிமையாளர் சத்யாவை, செல்வகுமார் தாக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் அன்னமங்களம் கிராமத்தை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினர் எஸ். செல்வகுமார் கழக கட்டுபாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என திமுக கழகம் அதிரடி அறிவிப்பை  வெளியிட்டு உள்ளது. 

இதற்கு முன்னதாக, கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் திமுக கட்சி உறுபினர்கள் சிலர் ரவுடித்தனம் செய்து ஓட்டல் உரிமையாளரை தாக்கி இலவச பிரியாணி கேட்டனர். இது திமுக கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவப்பெயர் உண்டானது. அதற்கு அடுத்த நாளே திமுக தலைவர் ஸ்டாலின்  அந்த ஓட்டலுக்கு  நேரடியாக சென்று, உரிமையாளரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின்னர், இது போன்று முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை உதவி காவல் ஆய்வாளர் முத்து மாரி தகாத வார்தைகளால் திட்ட்யதற்கு, எதிர்ப்பு தெரிவித்து  திமுக வினர் நாற்காலியை எடுத்து உடைபதும் தேர்வில்  படுத்துக்கொண்டு பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதே போன்று, திருவண்ணாமலையில் செல்போன் கடை ஒன்றில் திமுக நோர்வாகி ஒருவர் கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதை எல்லாம் உற்று கவனிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கோபம் அடைந்துள்ளார். கழகத்திற்கு  அவப்பெயரை ஏற்படுத்தும் திமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுபதுடன் அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட அதிரடியாக நீக்கி உள்ளார் ஸ்டாலின். எப்போதும் பொறுமையை கடைப்பிடிக்கும் ஸ்டாலின் கழகத்திற்கு அவப்பெயர் என்றவுடன், அதே போன்று ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், ஒரு சிறந்த தலைவர் என்பதை மேலும் நிரூபணம் செய்து உள்ளார்.