வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேமுதிகவினருக்கு அக்கட்சியில் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய தேமுதிக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், வேட்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தேமுதிக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி பலம், பண பலம், அதிகார பலம் என அனைத்தையும் தைரியத்துடன் எதிர்கொண்டு, தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றி களம்கண்ட சிங்கங்களாக ஜனநாயக்கத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக எதையும் எதிர்பாராமல் தமிழகத்தின் எதிர்கால நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சிறப்பாக பணியாற்றி, அரும்பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

வாக்குகள் எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு - பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதியும் எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மே 2-ம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.