Asianet News TamilAsianet News Tamil

#BREAKING எதுவும் நடக்கலாம்.. கண்கொத்தி பாம்பாக இருங்கள்.. தொண்டர்களை அலர்ட் செய்த ஸ்டாலின்..!

முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது. எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர்குலைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Be vigilant and avoid the celebration of victory... mk stalin
Author
Tamil Nadu, First Published May 2, 2021, 2:32 PM IST

முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது. எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர்குலைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 30 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. பெரும்பான்மைத் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருப்பதையே தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக மாலையில் இருந்து வரத் தொடங்க உள்ளன. ஆட்சி அமைக்க இருப்பது தி.மு.க.தான் என்பது உறுதியாகிவிட்டது.

Be vigilant and avoid the celebration of victory... mk stalin

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள நமது நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிக மிக விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது குளறுபடிகள் நடந்து விடாமல் தடுக்க வேண்டும். பெரிய குளறுபடிகள் எதுவும் செய்து விட முடியாது என்றாலும் - எங்காவது ஒரு அதிகாரி - அதைச் செய்து விடக் கூடும் என்பதால் அதிக கவனம் அவசியம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது. எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர்குலைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ஏதேனும் காரணம் காட்டி வெற்றிச் சான்றிதழை வழங்கக் காலதாமதம் செய்தால் உடனடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் எக்காரணம் கொண்டும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது. வாக்கு எண்ணிக்கையை முழுமையாக முடித்து, வெற்றிச் சான்றிதழைப் பெறுவதிலேயே குறியாக இருக்க வேண்டும்.

Be vigilant and avoid the celebration of victory... mk stalin

நமது வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட வெற்றியாகும். இருப்பினும் கொரோனா என்ற பெருந்தொற்று காலம் என்பதால் தொண்டர்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன். பெருந்தொற்று தொற்றிக் கொள்ளவும், பரவவும் காரணம் ஆகிவிடக்கூடாது. பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்கவும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்போம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios