குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஷகீன்பாஹ்  என்கிற இந்தப்போராட்டத்தில் பர்தா அணிந்து இஸ்லாமியர் அல்லாத பெண் ஒருவர் கலந்து கொண்டது தெரிய வந்தது. அந்தப்பெண் குஞ்சா கபூர்.  இவர் வட இந்திய மாரிதாஸ் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். புர்கா அணிந்து கொண்டு போராட்டத்தில் வன்முறை செய்ய திட்டமிட்டு வந்துள்ளதும் தெரிய வந்தது. 

 

அவரை சுற்றி வளைத்த இஸ்லாமிய பெண்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி திகைக்க வைத்தனர். அந்தக் காட்சிகள் கேமராக்களிலும் பதிவானது. பின்னர் குஞ்சா கபூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  இந்த குஞ்சா கபூர் ரைட் நரேட்டிவ் என்கிற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை ஆழமாக கூறி வருபவர். சுருக்கமாக சொல்லப்போனால் தமிழகத்தில் மாரிதாஸை போல அங்கு பிரபலமானவர். அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.