ஏற்கனவே பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் நம்மளை கோர்த்துவிட ஒரு குரூப் கங்கணம் கட்டிக் கொண்டு அலையிது, இப்பது நாம அந்த காட்டு பங்களாவுக்கு போனால் சந்தேகப்படுவாங்க... எதுக்கு நமக்கு வீண் வம்பு சென்னையிலேயே இருப்போம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது கோவை பயணத்தை கேன்சல் செய்துள்ளாராம்.

விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி செல்போனில் பேசி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் செல்போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்த ஆடியோவில் 'ஆளுநருக்கு அடுத்த லெவலில் உள்ள முக்கியமான விஐபிக்களுக்கு தேவை, அதனால் தான் பேசுகிறேன். சில பெரிய மனிதர்களுக்கு நீங்கள் தேவை. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் உங்களை அணுகியுள்ளேன். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறும்', உங்கள் வங்கிக் கணக்கில் மாதாமாதம் பணம் வரும் என என்று ஆசை காட்டிப் பேசுகிறார். மேலும், ஆளுநர் மாளிகை வரை எனக்கு செல்வாக்கு உள்ளது, இந்த ஆடியோ நாடெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட வேண்டும் என்ற எதிர்ப்பு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.இந்நிலையில் இந்த விவகராத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சந்தேகம் இருப்பதாகவும், பேராசிரியரின் பேச்சு இளம் பெண்களுடன் அவர் முதல் முறையாகப் பேசுவதாகவோ, இந்த இளம் பெண்களிடம் முயற்சிப்பதுதான் முதல் தடவை என்பதாகவோ புரிந்துகொள்ள முடியவில்லை.

மிக மிக உயர் பதவிகளில் உள்ளோர், கவர்னர் தாத்தா இல்லை, ஆளுநரை அருகிலிருந்து வீடியோ எடுத்ததாகவும் பேசியிருந்தது சந்தேகம் அதிகமானதாக அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநருக்கு எதிராக குரல் வலுக்கவே, செய்தியாளர்களை சந்தித்து பேசிய பன்வாரிலால் புரோஹித்திடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது “ நிர்மலா தேவியின் முகத்தைக் கூட இதுவரை பார்த்ததில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு பேரன், பேத்தி மட்டுமல்ல கொள்ளுபேரனே உள்ளான். எனக்கு 78 வயதாகிறது. ஏன் மேல் சந்தேகப்பட வேண்டாம் வென விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், “கோவையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செல்வதாக இருந்தது. அங்கு சென்றதும் கோவையில் தங்காமல் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காட்டுப் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றும் ஆளுநர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆளுநர் தங்கப்போகும் காட்டு பங்களாவை அதிகாரிகளும் ஆய்வு செய்துவிட்டு, ஓகே சொல்லியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து கவர்னருக்காக அந்தக் காட்டு பங்களாவைப் புதுப்பிக்கும் பணிகளும் நடந்துமுடிந்திருந்தன. ஆனால், பன்வாரிலால் புரோஹித் என்ன நினைக்கிறார் என்றால்? ஏற்கனவே அந்த நிர்மலா தேவி விவகாரத்தில் நம்மள கோர்த்துவிட முயற்சி பண்றாங்க, இப்படி இருக்கும் சூழலில் காட்டு பங்களாவுக்குச் சென்று தங்கினால், இங்கு இருப்பவர்கள் இன்னும் வேறு மாதிரி கதை கட்டிப் பேசுவார்கள்.

அது இன்னும் பெரிய சர்ச்சையை உருவாக்கிவிடும் என நினைத்த கவர்னர் தனது கோவை பயணத்தை கேன்சல் செய்துவிட்டாராம் பன்வாரிலால். அதேபோல காட்டு பங்களா பன்வாரிலால் புரோகிராமும் கேன்சல் ஆகிவிட்டதாம்