Asianet News TamilAsianet News Tamil

தடை போடுவதா..? விநாயகர் சதுர்த்தி விழாவை அரசே ஏற்று நடத்தணும்... சொல்கிறார் மதுரை ஆதினம்.!

விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட தடை விதிப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தி விழாவை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
 

Banning ..? The government will accept and conduct the Ganesha Chaturthi festival ... says Madurai Adinam!
Author
Tuticorin, First Published Sep 6, 2021, 9:13 PM IST

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் ஐம்பெரும்விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரி சுவாமிகள் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட தடை விதிப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தி விழாவை அரசே ஏற்று நடத்த வேண்டும். முன்பு வெள்ளாளர் சமுதாயத்துக்கு அடையாளமாக கிராம கர்ணம் பதவி வழக்கத்தில் இருந்தது. தற்போது அது பறிபோய்விட்டது.Banning ..? The government will accept and conduct the Ganesha Chaturthi festival ... says Madurai Adinam!
அந்தப் பதவியை சமுதாயத்தினர் அனைவரும் சேர்ந்து போராடி மீண்டும் பெற வேண்டும். இளைய தலைமுறையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மத்திய அரசு நாட்டைப் பாதுகாத்து வருகிறது. பிரதமர் மோடியின் செயலால் எல்லைப் பகுதி பாதுகாக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது. நித்யானந்தாவால் எங்கள் குரு மகா சன்னிதானத்தை ஒன்றும் செய்ய முடி யாது. அவருக்கும், எங்கள் குரு மகா சன்னிதானத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு சரியானது இல்லை” என்று மதுரை ஆதினம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரி சுவாமிகள் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios