தமிழகத்தை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் வங்கிகள் அனைத்துமே மே-3 தேதி வரை பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தகவல் வெளியாகி உள்ளன ,  உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பரவி வருகிறது,  உலக அளவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,   1.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் .  இந்தியாவில் இந்த வைரஸ்  திடீரென வேகமெடுக்க தொடங்கியுள்ளது .  இதுவரை இந்தியாவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயர்ந்தவர்களின் எண்ணிக்கை  400 கடந்துள்ளது . இந்நிலையில்  தமிழகத்தில் சுமார் ஆயிரத்தி 500-க்கும் மேற்பட்டோர்கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்த வைரஸ் மே மாதம் இந்தியாவில் தீவிரமடையும் என தெற்றுநோயியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் . இந்நிலையில்  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே -3ஆம்  தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் முடங்கியுள்ளன ,  ஆனால் மக்களின் சேவைக்காக வங்கிகள் தொடர்ந்து செயல்படுவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது . இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள வங்கி கிளைகளில் பணி நேரத்தை குறைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர் .  காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  மட்டும் பொதுமக்களுக்காக திறந்து வைத்திருக்குமாறு வலியுறுத்தினார் .  அதன்படி வங்கிகள் செயல்பட்டு வந்தன ,  இதற்கிடையில் ஊரடங்கால்  பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு நிவாரணத் தொகை அறிவித்தது .  குறிப்பாக ஜன் தன் வங்கி கணக்குகளில் தல ரூபாய் 500 போடப்பட்டது ,  வழக்கமான மாதாந்திர ஓய்வூதியத் தொகையும் செலுத்தப்பட்டது ,  இத்தகைய பண பரிமாற்ற தேவைகளுக்காக வங்கிகள் முழு நேரம் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது . 

இந்நிலையில் இதை ஏற்று கடந்த சில நாட்களாக வங்கிகள் மாலை 4 மணி வரை இயங்கின.  இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது , இதனால் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ,  இதுகுறித்து மாநில அளவிலான வங்கி நிர்வாகிகள் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ,  இதற்கான தகவல் வழங்கப்பட்டுள்ளது ,  அதாவது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கும் பணி முடிந்துவிட்டது ,  அதை பொதுமக்கள் படிப்படியாக எடுத்து வருகிறார்கள் .  மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் பிற்பகல் ஒரு மணிக்குள் வங்கி பரிமாற்றங்களை  முடித்துவிடுகிறார்கள் எனவே 3 தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கி கிளைகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் ஊழியர்களின் இருப்பைப் பொறுத்து சுழற்சி முறையில் 50% ஊழியர்களுடன் செயல்படலாம் . 

ஒரே பகுதியில் இரு வங்கியின் இரண்டு கிளைகள் இருந்தால் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து ஏதேனும் ஒரு கிளை மட்டும் செயல்படவேண்டும் அத்துடன் வங்கிகளுக்கு நேரில் வராமல் மின்னணு பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுமாறு  வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அறிவுறுத்த வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  மக்களின் தேவைக்காக 90% வங்கிகள் இயங்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர்  செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்த நிலையில் வங்கிகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது .