Asianet News TamilAsianet News Tamil

“ஸ்டாலினின் பையன் ரோடு ரோடாக சுத்துறாரு... நீங்களும் போங்க பதவி தானா தேடி வரும்...” உசுப்பிவிட்ட புகழேந்தி

banglalore pugazhendhi angry against Divaakaran and his son
banglalore pugazhendhi angry against  Divaakaran and jis son
Author
First Published Apr 25, 2018, 4:10 PM IST


கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான ஒருவரை திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சந்தித்தாராம். அவரை சந்தித்த அரை மணிநேரத்தில் திவாகரனும் சந்தித்துப் பேசினாராம். தான் மட்டும் எம்.எல்.ஏவாக இருந்தால் போதும் என நினைக்கிறார் தினகரன். 18 பேரையும் அவர் தெருவில் நிறுத்திவிட்டார். அவர்களை ஆறுதல்படுத்தும் வேலையை திவாகரன் செய்து வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. தகுதிநீக்க எம்.எல்.ஏக்களில் பலரும் வழிச் செலவுக்குக்கூடப் பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

 சசிகலா சிறையில் இருப்பது தனக்கு சாதகமானது என நினைக்கிறார் என இந்த சந்திப்பில் இந்த பேச்சு நடந்ததாம். இந்த சந்திப்பை அடுத்து தான்  மாபெறும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும். ஒரு பதிவைப் போட்டார். இத பதிவு தினகரனுக்கு எதிராகவே இருப்பது உறுதிப் படுத்தியது. அடுத்ததாக சின்னம்மாவைச் சிறையில் இருந்து மீட்பேன் என ஜெய் ஆனந்த் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அதாவது சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக அவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார்களாம். அதற்கு, தினகரன் பக்கம் இருக்கும் எம்எல்ஏக்களைத் தங்கள் பக்கம் இழுத்துவர வேண்டும் என்பதுதான் எடப்பாடி தரப்பில் தரப்பட்ட அசைன்மென்ட் என சொல்லப்படுகிறது. அதற்காகத்தான் அப்பாவும் பிள்ளையும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள்.

banglalore pugazhendhi angry against  Divaakaran and jis son

இதனையடுத்து, எம்எல்ஏக்கள் எல்லோரும் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள் என திவாகரனே வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தார். இதற்கு விலையாக திவாகரன் மகனுக்குக் கட்சியில் பொறுப்பு தருவதாக எடப்பாடி தரப்பில் வாக்குறுதி அளித்ததாக பேசிவந்த நிலையில் வெற்றிவேல் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

புகழேந்தி, ‘திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. வெற்றிவேல் ஏன் அப்படிப் பதிவிட்டார் என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் நட்போடு பேசிக்கொண்டிருந்ததை நானே பார்த்திருக்கிறேன். ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு இதுவரை திமுகவில் எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. ஆனால், ரோடு ரோடாக நடக்கிறார். எல்லா போராட்டங்களில் பங்கெடுக்க ஆரம்பித்திருக்கிறார். அவரைப் போல, திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்தும் கட்சிக்காக உழைக்கட்டும். அவருக்குப் பொறுப்பு தேடி வரும். முதலில் கட்சியில் பதவியை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் சரியில்லை. அம்மாவின் மரணத்தில் பலரும் சந்தேகத்தைக் கிளப்பி வருகிறார்கள்.

banglalore pugazhendhi angry against  Divaakaran and jis son

ஆனால் ஒரு விஷயம் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவர் மனம் நொந்து போய்தான் உயிரை விட்டார். தன்னைச் சுற்றித் திருடர்கள் இருப்பதாக உயிரோடு இருக்கும்போதே அம்மா சொன்னார். இப்போது அம்மா சொன்ன அந்த திருடர்கள் எடப்பாடி பக்கம்  தான் இருக்கிறார்கள் என பேசினார்.

வெற்றிவேலை அடுத்து, தற்போது பெங்களுரு புகழேந்தியும் டிவாகரனுக்கு எதிராக பேசியிருப்பதால், பயந்துபோன திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios