Asianet News TamilAsianet News Tamil

தரக்குறைவான பேச்சு.. மிரட்டல்.. ஸ்டாலினுக்காக ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவித்த பெங்களூரு புகழேந்தி..!

இது எஸ்.பி.வேலுமணியின் கோட்டை. எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் தொண்டாமுத்தூர் எல்லையை நீங்கள் தாண்ட முடியாது. தைரியம் இருந்தால் இப்போது நீங்கள் தொண்டாமுத்தூர் வரவேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

bangalore pugazhendhi complained about Rajendra Balaji
Author
Coimbatore, First Published Jan 15, 2022, 5:27 AM IST

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக மேற்கு மண்டலகாவல்துறை தலைவர் சுதாகரிடம் அவர் அளித்த புகாரில்: கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக தொண்டர்களிடையே பேசிய ராஜேந்திர பாலாஜி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசினார். 

bangalore pugazhendhi complained about Rajendra Balaji

மேலும், ‘இது எஸ்.பி.வேலுமணியின் கோட்டை. எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் தொண்டாமுத்தூர் எல்லையை நீங்கள் தாண்ட முடியாது. தைரியம் இருந்தால் இப்போது நீங்கள் தொண்டாமுத்தூர் வரவேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசினார். தொண்டாமுத்தூர் வரும்போது மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்க தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது.

bangalore pugazhendhi complained about Rajendra Balaji

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதுடன், இந்து, முஸ்லிம்மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சொற்களையும் அவர் பயன்படுத்தினார் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

bangalore pugazhendhi complained about Rajendra Balaji

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி;- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரக்குறைவாக பேசியுள்ளார். கடந்த ஆட்சியில் காவல்துறை அவர்கள் பக்கம் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளேன் என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios