Asianet News TamilAsianet News Tamil

எலிக்கொல்லி பசை விற்பனைக்கு தடை... தற்கொலைகளை குறைக்க நடவடிக்கை!!

தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலி கொல்லி பசை விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எலி கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வலிவாகை செய்யப்படும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

Ban on sale of raticide glue says minister ma subramanian
Author
Chennai, First Published Apr 29, 2022, 9:49 PM IST

தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலி கொல்லி பசை விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எலி கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வலிவாகை செய்யப்படும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அண்மைகாலமாக தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. அனைத்து பிரச்சனைக்கு தற்கொலை ஒன்றே தீர்வு என்னும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். வீட்டு பிரச்சனை முதல் தேர்வு தோல்வி வரை அனைத்திற்கும் தற்கொலை செய்துக்கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. தற்கொலைகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தற்கொலைகளை தடுக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கவனக்குறைவால் உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளது.

Ban on sale of raticide glue says minister ma subramanian

கடந்த 2016 ஆம் ஆண்டு சேலத்தில் கூலித் தொழியாளியின் வீட்டில் எலிக்காக வைத்திருந்த மருந்தை அவரது ஒன்றரை வயது குழந்தை சாப்பிட்டு உயிரிழந்தது. இதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டு அரியலூரில் செந்துறை கிராமத்தை சேர்ந்த இளைஞர் பெரியப்பா மகனின் திருமணத்திற்கு விடுப்பு கேட்டதால் பேராசிரியர் திட்டியதாக சொல்லி எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் கடந்த 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் கார்த்திகா என்பவர் கள்ளக்காதலனை மறக்க முடியாததால் 4 வயது பெண் குழந்தை மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு சேமியா உப்புமாவில் எலிகொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.

Ban on sale of raticide glue says minister ma subramanian

இதில் ஆண் குழந்தை இறந்துவிட்டது. பெண் குழந்தை குறைவாக உப்புமாவை சாப்பிட்டதால் தப்பியது. இதுபோல் எலிப்பேஸ்டால் ஏராளமான கொலைகளும் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன. இதை அடுத்து தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios