Asianet News TamilAsianet News Tamil

தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்த தடையா?...வரும் 13-ந் தேதி விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு….

Ban for evm
ban for-evm
Author
First Published Apr 11, 2017, 6:41 AM IST

தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்த தடையா?...வரும் 13-ந் தேதி விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு….

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமல்லாமல், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் காகித தனிக்கை முறை எந்திரத்தையும் பொருத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 13-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

காகித தனிக்கை முறை

சமாஜ்வாதிக் கட்சியின் முன்னாள் எம்.பி. அதுர் ரஹ்மான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டும் பயன்படுத்துவதை நிறுத்தி, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் காகித தனிக்கை முறை எந்திரத்தையும்(வி.வி.பி.ஏ.டி.) பொருத்த வேண்டும்.

அடிக்கடி சோதனை

உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் கீழ் ஒரு உயர்மட்டக்குழுவை அமைத்து, வாக்குப்பதிவின் நம்பகத்தன்மையை  எந்த தொகுதியில் வேண்டுமானாலும் வைத்து சோதனை செய்து, எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளதா ?என்பதை கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.

அப்போதுதான் தேர்தலின் போது மக்களின் நம்பிக்கையை எந்திரங்கள் பெறும். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் காகித தனிக்கை முறை எந்திரம் இல்லாமல் தேர்தலை நடத்த கூடாது என உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நடைமுறைப்படுத்தவில்லை

இதில் மனுதாரர் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில், “ மின்னணு வாக்குப்பதிவின் போது, மக்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் காகித தனிக்கை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்தால் தேர்தல் நியாயமாக சுதந்திரமாக நடக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.

13-ல் விசாரணை

இந்த மனுவை விசாரணை செய்த தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர்,  நீதிபதிகள் டி.ஓய். சந்திரசூத், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது-

இதேபோன்று பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த மனுவின் விசாரணை வரும் 13-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம், உங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். தனிப்பட்ட முறையில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.

 

 

 

,

Follow Us:
Download App:
  • android
  • ios