balthakare biography movie

சிவசேனா நிறுவனர் மறைந்த பால்தாக்கரே வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தை அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தன்னுடைய சொந்தச் செலவில் தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க கட்சியாகத் திகழ்கிறது சிவசேனா. அக்கட்சியின் நிறுவனர் பால்தாக்கரே வழக்கை வரலாற்றை எடுப்பதன் மூலம் இவரைப் பற்றி பலர் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் கூறுகையில், 2012-ஆம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி மறைந்த புகழ் மிக்க தலைவர் பால்தாக்கரே வழக்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதன் மூலம் ஒரு சிறந்த தலைவர் வாழ்கையை மக்களுக்கு எடுத்துக்கூறிய மன திருப்தி கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் இந்தப் படத்தின் துவக்கவிழா வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதி்ல் பாலிவுட் நடிகர் அமிதாப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் இந்தப் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு முடிந்ததும் ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கி 2019-ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றும், படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில்தான் படமாக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.