அமைச்சர் பதவியிழந்த பாலகிருஷ்ணரெட்டி... உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

https://static.asianetnews.com/images/authors/f71a4c12-3caf-58c5-bcf5-5f738e9fba48.jpg
First Published 9, Jan 2019, 5:00 PM IST
Balakrishnarredi appeal to the High Court
Highlights

தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு நீதிமன்றம் அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்திருக்கிறார். 

தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு நீதிமன்றம் அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

 

தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்து வந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவரது அமைச்சர் பதவி பறிபோனது. இதனையடுத்து அவர் மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும் என அளித்த அளித்த ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஒரு மாத கால அவகாசம் அளித்து கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்துள்ளார். 

loader