Asianet News TamilAsianet News Tamil

உச்சநீதிமன்றம் அதிரடி... அதிமுக முன்னாள் அமைச்சர் சிறைத்தண்டணை நிறுத்திவைப்பு...!

தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேல்முறையீடு விசாரணை முடியும் வரை சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

balakrishna reddy sentence stop
Author
Delhi, First Published Mar 25, 2019, 12:26 PM IST

தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேல்முறையீடு விசாரணை முடியும் வரை சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக 108 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 போ் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டது.balakrishna reddy sentence stop

இந்த வழக்கின் தீர்ப்பில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் தாம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. balakrishna reddy sentence stop

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். ஆனால், தனக்கு வழங்கபட்ட தண்டனையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது. balakrishna reddy sentence stop

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு முடியும் வரை பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். எனவே, பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடியும் வரை, சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. தொடர்ந்து அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios