Asianet News TamilAsianet News Tamil

இறுதி முயற்சி கைகொடுக்குமா..? தப்புவாரா பாலகிருஷ்ண ரெட்டி..?

பொதுச் சொத்து பாதுகாப்பு சட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.  
 

Balakrishna Reddy appealed to the Supreme Court
Author
tamil, First Published Jan 17, 2019, 1:44 PM IST

பொதுச் சொத்து பாதுகாப்பு சட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.  Balakrishna Reddy appealed to the Supreme Court

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு நீதிமன்றம் அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பொதுச்சொத்து சேத வழக்கின் தீப்பை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்கச்சொன்னால் சரி, தீர்ப்பையே ஏன் நிறுத்தி வைக்க வேண்டும். அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துச் செல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டும் எனவே கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தடை செய்ய முடியாது’’ என நீதிபதிகள் மறுத்தனர். Balakrishna Reddy appealed to the Supreme Court

இந்நிலையில், அவர் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதின்மன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணரெட்டியை கைது செய்யக்கோரியும், அவரது தொகுதியை காலியாக அறிவிக்க தமிழக அரசை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். Balakrishna Reddy appealed to the Supreme Court

தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ண  ரெட்டி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டு இருந்தனர். இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால், அவரது அமைச்சர் பதவி பறிபோனது.

Follow Us:
Download App:
  • android
  • ios