அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு வழங்கப்பட்ட பொதுச்சொத்து பாதுகாப்பு சட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் வினவி உள்ளது. 

தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு நீதிமன்றம் அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலகிருஷ்ணரெட்டி தரப்பில் பொதுச்சொத்து சேத வழக்கின் தீப்பை தடை செய்ய வேண்டும். காவல் ஆய்வாளரை திட்டியதாக என் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது என சம்பந்தப்பட்ட காவவல் ஆய்வாளரே சாடியம் அளித்திருக்கிறார். 72வது நபராக குற்றம்ன் சாட்டப்பட்டுள்ளேன். 28 சாட்சிகளில் நேரடியாக ஒருவர் கூட எனக்கு எதிராக சாட்சி சொல்லவில்லை. எனவே சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தடை செய்யவேண்டும் என வாதிட்டனர்.

அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ''3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்கச்சொன்னால் சரி, தீர்ப்பையே ஏன் நிறுத்தி வைக்க வேண்டும். அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துச் செல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டும் எனவே கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தடை செய்ய முடியாது’’ என உத்தரவிட்டனர். உயர்நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடால், பாலகிருஷ்ணரெட்டிக்கு தண்டனை உறுதியாகி இருக்கிறது. 

தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்து வந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவரது அமைச்சர் பதவி பறிபோனது.

 

இதனையடுத்து அவர் மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும் என அளித்த மனுவை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம் அளித்து கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்துள்ளார்.