ராஜராஜசோழன் பற்றி சர்ச்சையாக பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

 

இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் முன் ஜாமீனை ரத்து செய்யப்படும். கீழமை நீதிமன்றங்களில் காவல்துறையினர் புகார் தெரிவிக்கலாம்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 
 
கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஞ்சித், சோழ மன்னர் ராஜ ராஜ சோழனை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.  இதைத்தொடர்ந்து ரஞ்சித் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பபட்டன.

இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய ப.ரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரஞ்சித்தை சரமாரியாக விளாசியதோடு கைது செய்யவும் தடை விதித்தது. இந்நிலையில் இன்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.