பாகுபலி பிரதமரால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள முடியவில்லை. நாட்டை மேலும் துயரத்திற்கு தள்ளியது தான் அவரின் சாதனை" என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபில்.

காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பிரதமர் நரேந்திர மோடியிடம் "நேபாளம் நம்மை நோக்குகிறது. சீனாவுடன் முரண்பாடு உள்ளது" பிரதமர் அவர்களை ஏன் அவர்களின் பார்வையில் நீங்கள் பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதேபோன்ற கோரிக்கையை பிரதமர் மோடிக்கு வைத்திருக்கிறார்.

கொரோனா குறித்து பேசிய கபில்சிபல், "பாகுபலி பிரதமரால் கூட கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள முடியவில்லை. நாட்டை மேலும் துயரத்திற்கு தள்ளியது தான் அவரின் சாதனை" என்று கூறினார்.

இந்த காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் பலர் இறந்தனர். சிலர் கால்நடையாக நடந்து சென்ற போது இறந்தனர். சிலர் ரயிலில் இறந்தனர். சிலர் பசியால் இறந்தனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய நிதி எவ்வளவு" என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பேசிய கபில்சிபல், திருத்தப்பட்ட யுஏபிஏ பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாகவே நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

புலம்பெயர்ந்தோர் பிரச்சினையில், மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல சாலைகளில் நடப்பது அரசாங்கத்தின் அக்கறையின்மைக்கு ஒரு சான்றாகும், ஏனெனில் பட்டினியால் பலர் உயிர் இழந்திருக்கிறார்கள்.பிரதமரால் நெருக்கடியைக் கையாள முடியவில்லை. கொரோனா நெருக்கடியில் இறந்த தொழிலாளர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது என்று மத்திய அரசிடம் கேட்டிருக்கிறார் கபில்சிபில்.