Asianet News TamilAsianet News Tamil

ஹோட்டல்ல பில் கொடுக்காம வர நான் என்ன திமுக-வா..? தேஜஸ்வி சூர்யா கலாய்

உணவகம் ஒன்றுக்கு சென்றதாகவும், அப்போது உணவு சாப்பிட்டுவிட்டு சக பாஜக தொண்டர்கள் கடை உரிமையாளரிடம் பணத்தை கொடுத்ததாகவும், சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்ததை கண்டு அந்த ஹோட்டல் உரிமையாளர் திகைத்து போனதாகவும், அப்போது அதைக் கண்ட தான், நீங்கள் தயக்கமின்றி தாராளமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம், நீங்கள் தங்குகின்ற அளவிற்கு நாங்கள் திமுகவினர் அல்ல, பாஜக தொண்டர்கள் என அவரிடம் தாம் கூறி சமாதானப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

bad politics triggers bad social behaviour. DMK is an example
Author
Chennai, First Published Apr 3, 2021, 6:16 PM IST

உணவகங்களில் சாப்பிட்டு விட்டு பில் செலுத்தாதது முதல் டோல்கேட் ஊழியர்களை தாக்குவது வரை மிக மோசமான  அரசியல் சமூக கலாச்சாரம் தமிழகத்தில் நிலவுகிறது எனவும் அதற்கு முழுக்க முழுக்க திமுகதான் காரணம் எனவும் பாஜகவின் யுவ மோர்ச்சா தேசியத் தலைவரும், பெங்களூரு தெற்கு மாநிலங்களவை உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர் இவர் கூறியுள்ளார். 

bad politics triggers bad social behaviour. DMK is an example

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு தினங்களில் நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அதிமுக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக இம்முறை இரட்டை இலக்க வெற்றியுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து செயல்பட்டு வருகிறது.அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதற்காக மோடி, அமித்ஷா முதல் யோகி ஆதித்யாநாத்வரை பாஜக தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

bad politics triggers bad social behaviour. DMK is an example

இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக தமிழகத்தில் தனக்குள்ள செல்வாக்கை  நிரூபிக்க பகிரத பிரயத்தனம் செய்து வருகிறது. பாஜகவின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தை கூர்மை படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் நேரடி போட்டி என்ற கருத்தையும் பாஜக தலைவர்கள் அடிக்கடி பொது மேடைகளில் பதிவு செய்து வருகின்றனர்.தேசிய அளவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை விட பாஜக தலைவர்கள் திமுகவையே நேரடியாக விமர்சித்தும், பழித்தும் பேசி வருகின்றனர்.சமீபத்தில் அமைச்சர் எடப்பாடி  பனிச்சாமியை இழிவாக பேசிய ராசாவுக்கு எதிராக அரவக்குறிச்சி பிரச்சார பொதுக்கூட்டத்தில் மோடி ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.அமித்ஷாவும் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

bad politics triggers bad social behaviour. DMK is an example

இந்நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசனை ஆதரித்து கோவையில் அரங்கக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், யுவ மோர்ச்சா தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல் தலைவர்கள் நம் சமூகத்தின் தன்மையை தீர்மானிக்க கூடியவர்கள் எனவே அவர்களை தேர்வு செய்வதில் நான் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், நாம் குண்டர்களை தேர்ந்தெடுத்தால் சமூகத்தில் ரவுடியிசம் மற்றும் மோசமான  நடத்தைக்கு நாம் வாக்களிக்கிறோம் என்று அர்த்தம். சாப்பிட்டதற்கு உணவகங்களில் பில் கொடுக்காதது முதல்  டோல்கேட் ஊழியர்களை தாக்குவது போன்ற மோசமான அரசியல், சமூக கலாச்சாரம் தமிழகத்தில் நிலவுகிறது.  இதுபோன்ற ஒரு மோசமான சமூக நடத்தையை திமுக தூண்டுகிறது என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேபோல் திமுகவை  நக்கல் அடிக்கும் வகையில் குட்டி  கதை ஒன்றையும் கூறியுள்ளார். அதாவது, இன்று காலை தேர்தல் பிரச்சாரத்திற்கிடையில் சிற்றுண்டி சாப்பிட உணவகம் ஒன்றுக்கு சென்றதாகவும், அப்போது உணவு சாப்பிட்டுவிட்டு சக பாஜக தொண்டர்கள் கடை உரிமையாளரிடம் பணத்தை கொடுத்ததாகவும், சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்ததை கண்டு அந்த ஹோட்டல் உரிமையாளர் திகைத்து போனதாகவும், அப்போது அதைக் கண்ட தான், நீங்கள் தயக்கமின்றி தாராளமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்,  நீங்கள் தங்குகின்ற அளவிற்கு நாங்கள் திமுகவினர் அல்ல, பாஜக தொண்டர்கள் என அவரிடம் தாம் கூறி சமாதானப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அதாவது உணவகங்களில் திமுகவினர் பில் கொடுக்காமல்  அராஜகம்  செய்வதை விமர்சிக்கும் வகையில்  தேஜஸ்வி சூர்யாவின் இந்த பேச்சு அமைந்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios