தடுப்பூசி இலவசம் என தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அவலம் நிகழ்ந்துள்ள நிலையில், கமல்ஹாசன் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத் தேர்தலையொட்டி, தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்  ‘‘நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... தடுப்பூசி என்பது உயிர் காக்கும்  மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல. மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்’’எனப் பதிவிட்டுள்ளார்.