தன் தாய் பசியால் இறந்து விட்டார் என்று தெரியாமல் தாயின் சேலையை பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையின் வீடியோ காண்போர் இதயத்தை பிசைந்துகொண்டிருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நான்கு கட்ட ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு லாரிகள் கால்நடையாக சைக்கிள் மூலமாகவும் சொந்த ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.இதன் மூலம் சாலை விபத்துக்கள், உடல்நலக்குறைவால் மரணம் என இதுவரையில் 196 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், குஜராத்தில் இருந்து ரயில் மூலம் பீகார் மாநிலம் முஷாபர்பூருக்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் வந்துள்ளார். அங்குள்ள பிளாட்ஃபார்மில் தங்கிய நிலையில், பசி மற்றும் கடுமையான வெயில் காரணமாக சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையறியாத சுமார் 2 வயதுள்ள அவரது குழந்தை, தாயின் சடலத்துடன் விளையாடிக் கொண்டிருப்பதும், தாயை எழுப்ப முயன்ற சம்பவங்களும் பார்ப்போரின் மனதை உருக்கும் நிகழ்வாக இருந்தது.