Asianet News TamilAsianet News Tamil

பப்ஜி.. ரம்மி விளையாடிய 14 வயது சிறுவன் தற்கொலை..! கன்னியாகுமரியில் ஏற்பட்ட விபரீதம்..!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய மகனை கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட 14 வயது சிறுவனின் கோழை சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள் கன்னியாகுமரி மக்கள்.!
 

Babji .. 14 year old boy commits suicide by playing rummy ..! Tragedy in Kanyakumari ..!
Author
Kanyakumari, First Published Sep 25, 2020, 10:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய மகனை கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட 14 வயது சிறுவனின் கோழை சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள் கன்னியாகுமரி மக்கள்.!

Babji .. 14 year old boy commits suicide by playing rummy ..! Tragedy in Kanyakumari ..!


கன்னியாகுமரி மாவட்டம். மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார்(43) வயதான இவர் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(37)கருமன்கூடல் பகுதியில் தனது கணவரின் சொந்த வீட்டில் தனது மகன் இரணியல் அரசு பள்ளியில்  9-ம் வகுப்பு படிக்கும் சஜன்(14) என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மகன் சஜன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகள் பூட்டிய நிலையில்  பள்ளிக்கு செல்லாமல்  தனது தாயாருக்கு தந்தை வாங்கி கொடுத்த செல்போணில் அவ்வப்போது ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடிவந்த நிலையில் பப்ஜி கேமுக்கு அடிமையாகியுள்ளார். 

Babji .. 14 year old boy commits suicide by playing rummy ..! Tragedy in Kanyakumari ..!

பின்னர் தனது தகுதியை மீறி மேற்கொண்டு விளையாடிய சஜன் (14) ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆன் லைன் ரம்மியிலும் இறங்கியுள்ளார். இதில் கடந்த சில வாரங்களாகவே பணத்தை இழக்கவே தாயாரிடமும் வெளிநாட்டில் இருக்கும் தந்தையிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் மகன் குறித்து தனது கணவரிடம் கீதா கூறியதாக தெரிகிறது. தந்தை செல்போனில் மகன் சஜனை கண்டித்த நிலையில், தனது தாயாரிடம் தகராறு செய்த சஜன் தனது செல்போணை வீட்டு முன் எறிந்து உடைத்து விட்டு வெளியேறினார். ஆனால் கடந்த செவ்வாய் அன்று தாய் தேடவே மாயமான அவர் நேற்று வீட்டிற்கு வந்து பணமும் புதிய செல்போனும் வாங்கி தர வேண்டும் என்று மிரட்டிய நிலையில் தாயார் மறுக்கவே வீட்டிலிருந்து வெளியே சென்ற சஜன் அருகில் இருந்த வாழை தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். அதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மாணவனை மருத்துவமனையில் அனுமதித்ததோடு பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். திங்கள்சந்தை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயாரின் செல் போனில் பப்ஜி கேம் விளையாடி ஆன்லையன் ரம்மியில் பணத்தையும் இழந்து, சிறுவன்  வாழை தோப்பில் விஷம் அருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios